பெருமதிப்பிற்குரிய பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ கண்மணிகளுக்கு... வணக்கம். தொழில்நுட்பக் கல்விப் பணியில் 25 வருடங்கள் அனுபவம் பெற்ற ந. ஐயனாரப்பன் என்கின்ற நான், 8 வருடங்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி உள்ளேன். நான் கல் பதிப்பகம் என்ற பெயரில் சொந்தமாக பதிப்பகம் ஒன்றினை தொடங்கி, சில புத்தகங்களை வெளியிட்டு, புத்தக ஆசிரியர் என்ற பெருமையோடும் பெருமகிழ்ச்சியோடும் இருப்பதற்கு தங்களின் மேலான பங்களிப்பும் உண்டு என்பதை நன்றியோடு நினைவு கூற விரும்புகிறேன்.
எனது வேண்டுகோளை கருத்தில் கொண்டு கடந்த பருவங்களில் கல் பதிப்பகத்தின் வாயிலாக எனது புத்தகங்களை வாங்கி என்னை ஊக்குவித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதுபோன்றே தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த முறை வெளியிடப்பட்ட புத்தகங்களில் சில பிழைகள் மற்றும் விடுபட்ட பகுதிகள் இருப்பதாக மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களால் சுட்டிக்காட்டப் பட்டன. அத்தகைய பிழைகள் அனைத்தும் திருத்தப்பட்டு, சமீபத்திய பாடத் திட்டத்தின்படி எந்த ஒரு பகுதியும் விடுபட்டு விடாமல் அனைத்து புத்தகங்களும் மிக கவனமாக தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப் பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதர பதிப்பகங்களின் மூலம் இதுவரை கிடைத்து வந்த அனைத்து அனுகூலங்களையும் எனது பதிப்பகத்தின் மூலமும் தங்களுக்கு தவறாமல் வழங்க கடமைப் பட்டிருக்கிறேன். எனது புத்தகங்களை மேலும் பொலிவுறச் செய்யும் ஆக்கப் பூர்வமான கருத்துக்களை ஆர்வமுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்
ந. ஐயனாரப்பன், M.E., M.I.S.T.E.
# | Title | Qty |
---|
Name: | (*Required) |
Phone: | (*Required) |
Email: | |
Address: |
Propreitor:![]() N. IYANARAAPAN, M.E., M.I.S.T.E. |
|
9944650380 9626626747 |
|
kalpathippagam@gmail.com | |
Kal-Pathippagam | |
@kal_pathippagam | |
No.2, Arni Rd, Adukkamparai, Vellore - 632057, TamilNadu, India. |
Name: | |
Phone: | |
E-mail: |